சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.இப்போது சிறைக்குப் போயுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்துள்ளார். ஜெயலலிதா வழக்கின் காரணகர்த்தாவே இந்த சாமிதான்.
இவரால்தான் இன்று ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ளார். அப்படி இருக்கையில் சும்மா இருக்க முடியுமா இவரால்..
இதோ டிவிட்டரில் ஜெயலலிதாவை வாரி கமெண்ட் போட்டுள்ளார். தமிழக அரசின் அம்மா திட்டங்களை வைத்து கிண்டலடித்துள்ளார் சாமி தனது டிவிட்டரில்.
அம்மா திட்டங்களில் கடைசியாக ஜெயலலிதா அறிவித்தது அம்மா சிமெண்ட் திட்டம்தான். அம்மா சிமெண்ட் திட்டத்தை அறிவித்த பின்னர்தான் அடுத்த நாள் அவர் கைதானார். சிறைக்கும் போனார்.
இதுகுறித்து சாமி போட்டுள்ள டிவிட் கருத்தில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயில் வருமோ என்று கேட்டுள்ளார்.
அதேபோல இன்னொரு டிவிட்டில் அழுதபடி பதவியேற்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களைக் கிண்டலடித்துள்ளார்.
அதில், சென்னையில் அழுது வடியும் குழந்தைகளைக் கொண்ட கேபினட் வந்துள்ளது.
இவர்களால் சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் ஜனாதிபதி ஆட்சி தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
அதே டிவிட்டில், ஜெஜெ மேலும் பல வழக்குகள் பாயக் காத்துள்ளன. தயாராக இருக்கவும் என்றும் கூறியுள்ளார் சாமி.
No comments:
Post a Comment
Leave A Reply