கெகிராவை - மண்டாட்டுகம பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் பலியாகி உள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் லொரி ஒன்றும் மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் கெகிராவை மெதகம பிரதேசத்தைச்சேர்ந்த 21 வயது இளைஞரும் 48 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.
லொரிச் சாரதி தப்பிச் சென்ற போதும் தம்புள்ளை பொலிஸ் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொரி பருத்தித்துறையிலிலருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதணைக்காக சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply