நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து போலியோவினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுனவில, ஸ்டேன்லி ஜோசப் மாவத்தையைச் சேர்ந்த சிரிவர்தன ஹதன்கே செல்டன் காமினி என்ற 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் பலியானவராவார்.
இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இத்தாலியில் வசித்து வருகின்றனர். குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இத்தாலியிலிருந்து நாடு திரும்பியுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து மரணமாகியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொட்ரபாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
நீர்கொழும்பு வைத்தியசாலையின் 4ஆவது மாடியிலிருந்து வீழ்ந்தவர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
No comments:
Post a Comment
Leave A Reply