Inamullah Masihudeen
இடம்பெயர்ந்து
வாழும் வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றம் இதுவரைகாலமும் வெறும் அரசியல்
இலாப நஷ்டக் கணக்குகளுக்காக பிச்சைக் காரன் கால் புண் போல் பாவிக்கப் பட்டு
வந்துள்ளது என்பதே உண்மை...
வில்பத்து வனவிலங்குகள் சரணாலயப்
பகுதிக்குள் அன்றி அதன் எல்லைப் பிரதேசங்களில் தற்காலிகமாக முஸ்லிம்கள்
குடியேறியுள்ளமைக்கான காராணம் அவர்களுக்கு சொந்தமான உறுதிகள் உள்ள காணிகள்
சுமார் 300 ஏக்கர்கள் கடற்படையினரால் பல்வேறு நோக்கங்களுக்காக பறிமுதல்
செய்யப் பட்டிருக்கின்றமையாகும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள்
கடந்த காலங்களில் தமது பேரம் பேசும் வலிமைகளை தத்தமது அதிகார
அந்தஸ்த்துக்களுக்காக மாத்திரமே பயன்படுத்தி இன்று முஸ்லிம் சமூகத்தை
அரசியல் அனாதைகளாக அன்றி கைதிகளாக நட்டாற்றில் விட்டுள்ளனர்.
உடனடியாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று கூடி வடக்கிலும் கிழக்கிலும் பறிகொடுக்கப் பட்டுள்ள முஸ்லிம்களது பாரம்பரிய வதிவிடங்கள், காணிகள் குறித்த தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வரல் வேண்டும், அதன் அடிப்படையிலேயே அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கான ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினதும் நிலைப் பாடுகள் தேசத்தின் முன் வைக்கப் படல் வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தகால தனித்துவ அரசியலில் முஸ்லிம்கள்
சாதித்தவைகளை விட இழந்தவைகளே அதிகம், இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எமது கையாளாகாத முஸ்லிம் அரசியற் குழுக்களே காரணமாகும்.
முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் அவசரமாக ஒன்று கூடி இந்த விவகாரத்திற்கு ஒரு தெளிவான தீர்வைக் காண வேண்டும்.
இலங்கையில் உள்ள ஏனைய முற்போக்கு அரசியல் சக்திகளுடனும் மனித உரிமை அமைப்புக்களுடனும் இவ்வாறான விவகாரங்களை கலந்தாலோசித்து ஒரு தேசியப் பிரச்சினையாக இதனை நாம் அணுகி ஜனநாயக வழிமுறைகளில் இவ்வாறான இன்னோரன்ன விடயங்களுக்காக நாம் குரல் எழுப்புவதும் போராட்டங்களை முன்னெடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply