blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 10, 2014

சிறுமியுடன் குடும்பம் நடத்தி விட்டு கொலை - மூவர் விளக்கமறியலில்

சிறுமியுடன் குடும்பம் நடத்தி விட்டு கொலை - மூவர் விளக்கமறியலில்

 

16 வயது சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பின்னர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று எல்பிடிய நீதவானால் தந்தை, கணவன் மற்றும் நண்பர் ஆகிய மூவருக்குமே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எல்பிய - எல்ல, புவக்தோடெல்ல பிரதேசத்தில் சிறுமியுடன் நபரொருவர் இரண்டு வருடங்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மார்ச் மாதம் 25ம் திகதி அளவில் கொலை செய்யப்பட்ட குறித்த சிறுமியின் சடலம் ஏப்ரல் மாதம் 5ம் திகதி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் எனக் கூறப்படும் இளைஞர், தந்தை மற்றும் நண்பர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் மூவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►