இந்தியாவின் அடுத்த பிரதமராக
இந்துத் தேசியவாத தலைவரான நரேந்திர மோடி வரக்கூடிய தன்மை குறித்து
இந்தியாவின் பிரபல கலைஞர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் கடுமையான கவலையை
வெளியிட்டுள்ளனர்.
த கார்டியன் பிரிட்டிஷ் நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர்கள் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எழுத்தாளர் சல்மான் ருஷ்தி, சிற்பக் கலைஞர் அனிஷ்
கபூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியக் கலைஞர்கள்
பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
பல்வேறு சமூகங்களையும் மதிக்கின்ற நாடொன்றில் மோடி
பிரதமராக வருவது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கேடு விளைவிக்கும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்.
மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடியவர்
என்று பரவலாக கருத்துக்கள் வெளிப்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கடிதம்
எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply