பிபிசியிடம் பேசிய இளைஞர்களில் நாலில் ஒருவர் 12 வயதை எட்ட முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்
பிரிட்டனில் பிபிசியின்
ஆய்வொன்றில் கலந்துகொண்ட இளைஞர்களில் நால்வரில் ஒருவர், தாம் 12 வயதை எட்ட
முன்னரே இணையதளத்தில் பாலியல்- ஆபாச படங்களைப் பார்த்துள்ளதாகக்
கூறியுள்ளனர்.
பிரிட்டனில் உள்ள 16 வயது முதல் 21 வயது வரையான 1000 இளைஞர்களிடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
'ஆபாசப் படங்கள்: அவற்றின் பாதிப்பு என்ன?' என்ற
தலைப்பிலான பிபிசியின் தொலைக்காட்சி ஆவணப் படத்திற்காக இந்த
இளைஞர்களிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும்
மேற்பட்டவர்கள், இணையதள ஆபாசப் படங்கள் தமது பாலியல் ரீதியான
எதிர்பார்ப்புகளை பாதித்துள்ளதாக கவலைப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply