வாஷிங்டன்,
அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள மோர்க்கன் மாகாண பல்கலைக்கழகத்தில்
முழு நேர பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மனோஜ் ஜா (வயது 46). இவர்
மாணவர்களுக்கு சேர வேண்டிய 7 லட்சம் டாலர் (சுமார் ரூ. 4¼ கோடி) கல்வி
ஆராய்ச்சி உதவித்தொகைகளை மோசடி செய்து ஏமாற்றி விட்டார் என குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. அரசு ஆவணத்தை திருடியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, மனோஜ் ஜா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இவருக்கு 5
குற்றச்சாட்டுகள் மீது தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், அரசு ஆவணத்தை திருடிய
ஒரு குற்றச்சாட்டின் பேரில் 10 வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
தண்டனை விவரம் ஜூலை மாதம் 11–ந்தேதி அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply