blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 11, 2014

ஆஸ்திரேலியாவை பலத்த புயல் நெருங்குகிறது; கடலோர மக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

சிட்னி,
ஆஸ்திரேலிய நாட்டின் வடகிழக்கு பகுதியில், லிசார்டு தீவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீப் பகுதியை பலத்த புயல் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த மழை பெய்யும். மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடலில் பேரலைகள் எழும், கடல் மட்டம் உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கிரேட் பேரியர் ரீப்பில் கடலோரப் பகுதிகளில் வசித்த மக்களும், சுற்றுலாப்பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►