விமானத்தில் இருந்தும், மிக உயரமான
இடங்களில் இருந்தும் குதிப்பவர்கள் பெரிய பாராசூட்டை பயன்படுத்துவது
வழக்கம். அத்தகைய பாராசூட் கூட சில நேரங்களில், குதிப்பவர்களை ‘அம்போ’ என
விட்டு விடும். ஆனால் வெறும் 35 சதுர அடி அளவுடைய பாராசூட் மூலம் பத்திரமாக
குதித்து, பார்த்தவர்களை மலைக்கச்செய்துள்ளார் வீரர் ஒருவர்.
வெனிசுலா நாட்டு பாராசூட் வீரரான எர்னஸ்டோ கெயின்சா என்பவர், உயரமான
பகுதிகளில் இருந்து குதிக்கும் ‘ஸ்கைடைவிங்’கில் தேர்ச்சி பெற்றவராக
விளங்கி வருகிறார். கடந்த வாரம் துபாய் கிளப்பில் நடந்த ‘ஸ்கைடைவிங்’
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சாதாரண ‘பெட்ஷீட்’ அளவே உள்ள பாராசூட்
மூலம் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கினார்.
வெறும் 3½ நிமிடங்களில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக
மாறியுள்ளது. அந்த வகையில் கடந்த 2006–ம் ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த
லைகி கானி என்பவர் பயன்படுத்திய பாராசூட்டே இதுவரை சாதனையாக இருந்தது.
அதைவிட எர்னஸ்டோ கெயின்சா பயன்படுத்திய பாராசூட், 0.18 சதுர மீட்டர் குறைவு
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply