blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 9, 2014

கனடாவை அசத்தும் இளவயது விமானி

கனடாவை சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் இளவயதிலேயே தனியார் விமான ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளான்.


ஆல்பர்டாவை (Alberta) சேர்ந்த சிறுவன் இவான் மில்லர் (Evan Miller) சிறுவயது முதலே வானில் பறக்கவேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளான்.

இதனால் தனது சகோதரருடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் விமான பயிற்சி மேற்கொண்டுள்ளான்.

இவானின் பயிற்சியாளர் ராபர்ட் (Robert Whitley) இதுபற்றி கூறுகையில், இவான் ஒரு நல்ல அர்ப்பணிப்புள்ள மாணவன் என்று தெரிவித்துள்ளார்.

குளிர் காலத்தில் கடுமையான வானிலையிலும் எவான் இயற்கையாகவே நன்றாக விமானம் ஓட்டும் திறமை பெற்றுள்ளதை ராபர்ட் அறிந்துள்ளார்.

இவானின் தந்தை கூறுகையில், ராபர்ட் ஒரு சிறந்த பயிற்சியாளர், அவர் எனது மகனின் ஒவ்வொரு அடியிலும் துணை இருந்து ஊக்கம் அளித்துள்ளார்.

தற்போது 17 வயதாகும் இவான் 18வயது பூர்த்தியானதும் வணிகரீதியான விமானிக்கான உரிமத்தை பெறமுடியும்.

மேலும், வானில் பறப்பது பற்றி இவான் கூறுகையில் அது ஒரு வேடிக்கை நிறைந்த ஆனந்த அனுபவம் என்று தெரிவித்துள்ளான்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►