அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா (California) மாகாணத்தை சேர்ந்தவர் சாவோண்டா கால்மேன் (40). இவர் ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிகிறார்.
இவர் சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டில் தனது மகன் (15) 2 வயது சகோதரியுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த தாயார் உடனடியாக, 911 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொலிசாரை தனது வீட்டிற்கு அவசரமாக வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம், தனது மகன் ஆபாச படம் பார்ப்பதாகவும், அதனால் அவனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது என்றும் அதனால் அந்த சிறுவனை கைது செய்ய முடியாது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு சவோண்டாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply