சிரியாவின் ரக்கா (Raqqa) நகரை தலைமையகமாக கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் அல்கான்சா (Al-Khansaa) படை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது, பெண்கள் வேடத்தில் பணி புரியும் ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த படையில் 18 லிருந்து 24 வயதுக்குட்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நாடெங்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்கள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு கொள்வதில்லை என்றும் இவர்களுக்கு மாதச் சம்பளமாக 161 டொலர்கள் வழங்கப்படுகின்றது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் உம் அல் ரயான் (Umm Al-Rayan) என்ற மற்றொரு பெண்கள் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply