அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனடிப்படையில்,
சர்வதேச போர்க்குற்ற விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற
நிலைப்பாட்டை இலங்கை இன்றும் மீண்டும் வலியுறுத்துவதாக ஜெனிவாவுக்கான
இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் 27வது அமர்வில் நேற்று உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனை வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக
அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய பிரேரணையை
இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை
இலங்கை அரசாங்கம் போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை தொடரவுள்ளதாகவும்,
சாட்சி பாதுகாப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்
ரவிநாத் ஆரியசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, September 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply