ஊவா பரணகம டவுன்சைட் தோட்டத்தில் மூடப்பட்டிருக்கின்ற தேயிலைதொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் இடிதாங்கியை திருடமுயன்றார் என்ற குற்றச்சாட்டில் வெலிமடை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவரை ஊவா பரணகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவருடன் மற்றுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த தோட்டத்தின் காவலாளிக்கு பெருந்தொகையில் இலஞ்சம் கொடுத்து இடிதாங்கியை கழற்றிச்செல்வதற்கு முயன்றுள்ளார். இது தொடர்பில் காவலாளி, அத்தோட்டத்தின் முகாமையாளருக்கு தகவல்கொடுத்துள்ளார்.
இதனையடுத்தே தோட்ட முகாமையாளர் முச்சக்கரவண்டியுடன் அவ்விருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 19, 2014
இடிதாங்கியை திருடமுயன்ற பிரதேச சபை உறுப்பினர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சேது படத்துக்கு முந்தையச் சூழலில் இருந்து ‘ஐ’-க்காக மேற்கொண்ட சிரத்தைகள் வரை நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார், நடிகர் விக்ரம்.
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் நன்னாளாய் கொண்டாடப்படும் தீப திருநாளாம் தீபாவளி பண்டிகையையொட்டி இணையத்தள வாசகர்கள் அன...
-
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறிய...

No comments:
Post a Comment
Leave A Reply