இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று
கேட்டுகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம்
செய்து, இங்குள்ள உண்மையான நிலைமைகளை உங்களின் நாடுகளுக்கு
தெளிவுபடுத்துமாறு புதிய தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் தூதுவர்கள் தங்களுடைய
நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று திங்கட்கிழமை
அலரிமாளிகையில் வைத்து கையளித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இலங்கைகக்கான தூதுவர்கள், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை
மக்கள் தொடர்பிலான நற்செய்திகளையும் அடிமட்ட நிலைமைகளையும் தமது நாடுகளில்
தலைவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம்
அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியேமால் பெரேரா, ஜனாதிபதியின்
செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான கொங்கோ தூதுவர் பிலிக்ஸ் நகோமா ( வாசஸ்தலம் புதுடெல்லி),
ஆர்ஜன்டீன தூதுவர் ராகுல் இக்னாசியோ குவாஸ்டாவினோ ( வாசஸ்தலம் -
புதுடெல்லி) தென் கொரியா தூதுவர் சாங் வேங் சாம், பிலிப்பைன்ஸ் தூதுவர்
வின்சேன்டி விவியன்சியோ டி பண்டில்லோ ( வாசஸ்தலம் டாக்கா), பாலஸ்தீன
தூதுவர் சுஹைர் அஹமடல்லா சாஹிட், எல்- சல்வடோர் தூதுவர் கில்ஹெரிமோ ரூபியோ
பன்நெஸ் ( வாசஸ்தலம் புதுடெல்லி) ஆகியோரே தங்களுடைய நியமனக்கடிதங்களை
நேற்று கையளித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, May 13, 2014
உண்மையை சொல்லுங்கள்: புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...
-
இந்தியா உத்தர பிரதேசம், சல்டன் என்ற அரச மருத்துவமனையில் இதயம் உடலுக்கு வெளியே அமைந்த நிலையில் ஆண் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. ...
.jpg)
No comments:
Post a Comment
Leave A Reply