blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 1, 2014

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி 4,658 குடும்பங்கள் பெரிதும் பாதிப்பு


வரட்சியினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 , 658 குடும்பங்களைச் சேர்ந்த 15 , 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ள நிலையில் மாசி மழை போல் சித்திரை மழை பொய்க்குமாயின் எதிர்வரும் மாதங்களில் கிணற்று நீர் வற்றும் நிலையேற்படுமென வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பருவ மழை வீழ்ச்சி குறைந்தளவிலேயே காணப்பட்டது.

இந்நிலையில் மாசி மழை பொய்த்துப் போனதால் முல்லைத்தீவில் வரட்சி காணப்படுவதாக வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார். மாசி மழையைப் போன்று சித்திரை மழை பொய்க்குமாயின் குள நீர் வற்றி ஜூன் மாதத்துக்கு பின்னர் கிணறுகளில் நீர் வற்றும் நிலைமை தோன்றும் . அத்துடன் உப உணவு பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையேற்படும். இதேவேளை நவம்பர் , டிசம்பரில் பெய்யும் பருவ மழை குறைவாக இருந்ததால் தற்போது தென்னை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது. அது மட்டுமன்றி பருவ மழையின் போது குளங்கள் , ஆறுகளின் அணைகளை உடைத்துக் கொண்டு வெள்ளம் கடலில் கலப்பதால் கடலிலுள்ள மீன், இறால்கள் குளங்களுக்கும் ஆறுகளுக்கும் வருவது வழமை. இம்முறை வெள்ளம் கடலுடன் கலக்காதது மட்டுமன்றி வரட்சியினால் கடற்றொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்போகத்தின் வரட்சியினால் நெல் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். அவர்களுக்கான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டுமென்று பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 ,658 குடும்பங்களைச் சேர்ந்த 15 , 469 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்ந்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மாந்தை கிழக்கில் 451 குடும்பங்களைச் சேர்ந்த 1519 பேரும் ஒட்டுசுட்டானில் 787 குடும்பங்களை சேர்ந்த 2644 பேரும், கரைத்துறைப்பற்றைச் சேர்ந்த 945 குடும்பங்களைச் சேர்ந்த 2938 பேரும், புதுக்குடியிருப்பில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 742 பேரும், துணுக்காயில் 2259 குடும்பங்களைச் சேர்ந்த 7626 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►