blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 1, 2014

கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கடும் தாக்குதல்; பொருட்கள் அனைத்தையும் கடலில் வீசினர்


இராமேஸ்வரம்: கச்சதீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராமேஸ்வரத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் நேற்று செவ்வாய் காலை கச்சதீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மோகன் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் மரிய எட்வர்ட், விஸ்வநாதன், பாஸ்கரன் , ரோனிமஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மீனவர்களை தாக்கிய கடற்படையினர் படகில் இருந்த மீன்பிடி வலை, ஜி.பி.எஸ்.கருவி மற்றும் உணவுப் பாத்திரங்கள் போன்றவற்றை கடலுக்குள் வீசினர். குடிபோதையில் இருந்த இலங்கை கடற்படையினர் கட்டை, இரும்புத்தடி மற்றும் பிளாஸ்டிக் கயிறு ஆகியவற்றைக் கொண்டு மீனவர்களைத் தாக்கியதுடன் இனிமேல் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது எனக்கூறி அடித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்றுக்காலை கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக இராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைச் சிறையில் இருந்த மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது மீனவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►