blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 1, 2014

நாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரிப்பு


கல்முனை ஹுதா பௌண்டேசன் மூலம் அண்மையில் பெண்களுக்கு நடைபெற்ற இரு மாதகால பயிற்சிநெரியில் கலந்து கொண்ட செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் கல்முனை பிரதேச செயலகத்தின் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கின்றது எனது தனதுரையில் குறிப்பிட்டார். 

மேலும் அவர் கூறுகையில் பெண்கள் வீட்டின் கண்கள் மாத்திரமல்ல பெண்கள் சுதந்திரமாக வாழ முடியாவிட்டால் நாட்டிலும் அமைதியினை எதிர்பார்க்க முடியாது. தற்கால சூழ்நிலையினை பொருத்தவரை பெண்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்கள் அதிகரித்துள்ளன ஆயினும் அது எந்தளவு து{ரம் பெண்களுக்கு சாதகமாகயிருக்கின்றது என்பது இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

 ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து வளர்ந்து தனக்குரிய முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும் வரை பெற்றோர்கள் மிக மிக கரிசினையாக இருக்க வேண்டும். துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது அப்பெண்பிள்ளைக்கும் பெற்றோருக்குமிடையிலான தொடர்வுயின்மையே அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கான அடிப்படைகாரணமாகயிருகின்றது. 

பெற்றோர் தன்பிள்ளைகளிடம் அன்பாகவும் அவர்களின் தேவைகளை புரிந்து நடந்தால் அப்பிள்ளை எந்த பிரச்சினை ஏற்படினும் அதை முதலில் தனது பெற்றோரிடமே தெரிவிப்பர் இப்பழக்கமானது சில வீடுகளில் மாத்திரமே காணப்படுவது துரதிஷ்ட விடயமாகவுள்ளது. இவ்நவீன காலத்தில் பிள்ளைகளின் தொடர்வுகள் இன்டநெட்டுடன் அதிகரித்துள்ளது வீட்டிலுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படத்துவதை விட முகப் புத்தகங்களில் தொடர்பினை ஏற்படுத்தி தமது பெருமதியான வாழ்க்கையினை அழித்து விடுகின்றார்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►