பௌத்த பிக்குகளுக்கு வாகன
ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தடைசெய்ய அரசாங்கம் முன்னெடுத்துள்ள
நடவடிக்கைகளை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இலங்கையின்
மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிக்குகளுக்கு வாகன ஓட்டுநர் வழங்கப்படுவதை
அரசாங்கம் தடுத்தால், அது அரசியல் சாசனத்தின் கீழ் தமக்கு உத்திரவாதம்
வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என வாதிட்டு பௌத்த
பிக்குகள் சிலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்தினால், அரசியல் சாசனம் மீறப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாறாக பௌத்த பிக்குகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்
வழங்கினால்தான், பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதியை
அரசாங்கம் மீறுவதாக அமையும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply