blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 4, 2014

எம்.எச். 370 தேடுதலில் நம்பிக்கை இழக்கும் ஆஸி. பிரதமர் : விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட மங்குஸ்தான் பழங்களுக்குள் வெடிபொருட்கள்


காணாமல்போன மலேஷிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றியளிக்கும் என்ற நிச்சயத்தன்மை இல்லை என தேடுதலை முன்னின்று நடாத்தும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் டொனி அபொட் எச்சரித்துள்ளார்.

239 பேருடன் கடந்த மாதம் 8ஆம் திகதி மர்மமான எம்.எச்.370 விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்பட்டு அவுஸ்திரேலியானி; பேர்த் நகரிலிருந்து 1,600 கிலோ மீற்றர் தூரத்தில் பல கோடி செலவில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காணாமல்போன விமானம் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை அவுஸ்திரேலியாவிடத்தில் குறைந்துள்ளது. தேடுதல் நடைபெறும் பேர்த் நகருக்கு நிலைமைகளை ஆராய மலேஷிய பிரதமர் நஜிப் ரஷாக் நேற்று சென்றடைந்தார்.

இதன்போது பேர்த் நகரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டிலேயே எம்.எச். 370 தேடுததில் வெற்றியில் ஆஸி பிரதமர் நிச்சயமற்ற தன்மையை வெளியிட்டுள்ளார்.

தேடுதல் குறிந்து
டொனி அபொட் கூறுகையில், மனித வரலாற்றிலேயே இது மிகவும் கடினமாது. அனைத்து வகையிலும் நாங்கள் முயற்சிக்கின்றொம். தினமும் சிறியளவிலான தகவலைக்கொண்;டே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் உண்மையான விடைகள் கிடைக்கும் வரையில் நாங்கள் ஓய்வெடுக்கமாட்டோம். பயணிகளின் குடும்பங்களுக்கு நாங்கள் ஆறதலளிக்க வேண்டும்.' என்றார் மலேஷிய பிரதமர் நஜீப்.

விமானம் காணாமல்போனதிலிருந்து உலகின் பல நாடுகளும் இணைந்து பாரிய தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவொன்று. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தேடுதலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விமானம் காணாமல்போனதற்கு விமானத்திலுள்ள 227 பயணிகளுக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என மலேஷிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஆனால் விமானம் மர்மமானதற்கான காரணம் தெரியவரவில்லை என மலேஷிய பொலிஸ் தலைமை அதிகாரி ஜெனரல் காலித் அபுபக்கர் நேற்று கூறினார்.

எம்.எச். 370 விமானத்தின் சரக்குப் பகுதியில் சுமார் 3500 கிலோ கிராம் மங்குஸ்தான் பழங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அதற்குள் வெடிபொருட்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. இதனை யார் கொண்டுவந்தார்கள்? விமானத்தில் வைத்தது, பொதி செய்தது யார் என விசாரணைகள் மேற்கொள்வதாக நேற்று முன்தினம் பொலிஸார் தெரிவித்திருத்தனர்.

இதேவேளை கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்க தீவிரம் காட்டுவதுடன் விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க 8 நாடுகள் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►