blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 4, 2014

புத்தாண்டு காலத்தில் பேஸ்புக், கைத்தொலைபேசி ஊடான வாழ்த்துச் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படவும் பொலிஸார் அறிவுரை


புதுவருட வாழ்த்துச் செய்திகளை பேஸ்புக் மற்றும் தொலைபேசி ஊடாக அனுப்பும் விடயங்களிலும் மக்கள் அதிகவனம் செலுத்தவேண்டுமென்றும்   தெரியாதவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றம் இவ்வாறான விடயங்களால் பல குடும்ப பிரச்சினைகள் உருவாகுவதாகவும் எனவே விடயங்களில் மிக அவதானமாக ச் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 6 மணிமுதல் 20 திகதி  காலை 6 மணி வரையிலான காலப்பகுதியில்  மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விஷேட செயற்த்திட்டம் ஒன்று நாடளாவியரீதியில்
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.
சிங்கள தமிழ் புதுவருடகாலப் பகுதியிலேயே அதிகமான  வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் முகமாகவே இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் போலி நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புளங்குவதால் புதுவருட காலப்பகுதியில் பொருடகள் கொள்வனவு செய்யும் போது இவ்விடயத்திலும் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பட்டாசு கொளுத்துதல் மற்றும் புதுவருட காலப்பகுதியில் வெளியில் செல்லும் போது உடமைகளை பாதுகாத்தல் போன்ற விடயங்களிலும் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் மக்களிடம் கேட்டுக் கெண்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►