பாகிஸ்தான் பிரஜை ஒருவர் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் புதன்கிழமை இரவு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.
கராச்சியிலிருந்து இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜையின் இரு கைப்பையில் இருந்து 200 கிராம் ஹேரோய்னும் அவரது பாதணி ஒன்றுக்குள்ளிருந்து 100 கிராம் ஹெரோய்னும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 300 கிராம் ஹெரோய்னின் பெறுமதி 2.5 மில்லியன் ரூபாக்களாகுமென அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Leave A Reply