எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 4, 2014
ஆணின் விரலை வெட்டி துண்டாடிய பெண்!
ஆணொருவரின் கை பெருவிரலை துண்டித்து விட்டு தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் குறித்த ஆணின் கையை வெட்டியபோது அவரது பெருவிரல் துண்டிக்கப்பட்டதுடன் கடுங்காயங்களுக்குள்ளானார். இதையடுத்து அங்கு கூடிய அயலவர்கள் துண்டிக்கப்பட்ட பெருவிரலுடன் கடுங்காயங்களுக்குள்ளான நபரை பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந் நபர் உடனடியாக சத்திர சிகிச்சைக்குற்படுத்தி துண்டிக்கப்பட்ட கைப் பெருவிரலை இணைக்க டாக்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயணளிக்கவில்லை. தற்போது அந் நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பதுளைப் பகுதியின் சென் ஜேம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் குறித்த நபருக்கிடையில் நீண்ட காலமாகவிருந்தே முறுகல் நிலை நீடித்திருந்தது. சம்பவதினம் முறுகல் நிலை முற்றி மோதலாக மாறியது. இம் மோதலில் அப் பெண் கத்தியொன்றினை எடுத்து அந்நபர் கைப் பெருவிரல் துண்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக பதுளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரின் பேரில் பொலிஸார் குறிப்பிட்ட பெண்ணை கைது செய்ய முற்பட்ட போது அப் பெண் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் விசாரணைகள் தொடர்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜாகீர் ஹூசேனுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் மற...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டு...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...

No comments:
Post a Comment
Leave A Reply