blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, December 8, 2015

முஸ்லிம் மாணவிகள் முகம் மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் பணம் வழங்குவதா?! கொதிக்கும் பொ.பா. சேனாவின் பொதுச் செயலாளர்..

முஸ்லிம் பாலிகாவிலுள்ள மாணவிகளுக்கு முகம் மூடுவதற்கு இந்த நாட்டு அரசாங்கம் பணம் வழங்குவதா? எனவும், இந்நாட்டின் மூளை வளர்ச்சி குறைந்த கல்வி அமைச்சர்களுக்கு இது விளங்குவதில்லையா? எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.

பிரிவினை வாதம் இல்லாமல் ஒரே தொகையை சகல மாணவர்களுக்கும் வழங்குமாறு கல்வி அமைச்சரை நாம் கேட்டுக் கொள்கின்றோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் என வேறுபாடு கிடையாது. பாடசாலையிலுள்ள சகலரும் மாணவர்கள். ஒரே மாதிரியாக மாணவர்களைக் கவனியுங்கள் எனவும் தேரர் மேலும் கூறினார்.

அதேவேளை
நாட்டிலுள்ள பொது மக்களின் வரிப் பணத்தில் ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும், மதக்குழுக்களுக்கும் வேண்டிய பிரகாரம் ஆடை வழங்க இடமளிப்பதா? அரசாங்கத்துக்கு மக்களின் பொதுப் பணத்தை வழங்க அனுமதிப்பதா? என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டு மாணவர்களுக்கு ஒரு பொதுவான ஆடை ஒழுங்கு தேவை என்பதை பாடசாலை சீருடைக்கான பண வவுச்சர் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆடை ஒழுங்கொன்று தேவையாயின், அந்தப் பொது ஆடை ஒழுங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும்  எனவும் அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.

பாடசாலை சீருடைக்கான பண வவுச்சர் வழங்கும் போது தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களை விட பெறுமதி கூடிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் கலாசார சமய ஒழுங்குகளுக்கேற்ப, ஏற்கனவே பல்லாண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த வெள்ளாடைத்துணியின் பெறுமதிக்கேற்ப இந்த பண வவுச்சர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையே பொதுபல சேனா பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►