கொழும்பு
வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் 17 வயதுச் சிறுவனுடன் மாயமானா்.
குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு
வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை
பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக்
கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது.
சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில்
வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு தனது தாயுடன்
சென்று வந்ததாகவும் தற்போது க.பொ.த ச.தா பரீட்சை முடிந்தவுடன் கொழும்பில்
உயா்கல்வி கற்கப் போவதாக சிறுவன் தாயிடம் தொடா்ந்து வற்புறுத்தி
வந்ததாகவும் தெரியவருகின்றது.
இதற்கு தாயாரும் வெளிநாட்டில் உள்ள சகோதரியும் சம்மதிக்காததால் சிறுவன்
தனியே கொழும்பு சென்றுள்ளான்.
தாயார் சிறுவனை வரும்படி அழைத்தும் சிறுவன்
வராத காரணத்தால் சிறுவனை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் தனது
தம்பியுடன் தாயார் கொழும்பு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனும் தங்கியிருந்த வீட்டுப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி
தொடா்மாடிக் குடியிருப்பு காவலா்களிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு
வேறு இடத்திற்குச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.
குறித்த குடும்பப் பெண்ணை தொலைபேசியில் தாயார் தொடா்பு கொண்டபோது,
தாயாரை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறும் சிறுவன் உயா்கல்வி
கற்றபின் வருவான் எனவும் பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக தாயாரால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 2, 2015
17 வயது சிறுவனுடன் குடும்பப் பெண் காதல் – இருவரும்???
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
-
ஈராக் மற்றும் சிரிய எல்லைப்பகுதியில் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதலை நடத்த...
No comments:
Post a Comment
Leave A Reply