எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுவேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும்
உடன்படிக்கையில் உள்ள கையொப்பங்களை அரச பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு
உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (02) இந்த உத்தரவை பிறப்பித்தது.
தமக்கிடையே குறித்த உடன்படிக்கை செய்து கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட இந்த உடன்படிக்கை ஆவணம் போலியானது என்று ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டிருந்தார்.
இதனையடுத்தே இன்று கோட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை இரகசிய பொலிஸாருக்கு பிறப்பித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் இந்தக்குற்றசாட்டு தொடர்பில் ஏற்கனவே அவரிடமும் ரணில் மற்றும் மைத்திரியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply