blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, March 6, 2015

இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை - சுமனசிறி தேரர்

இஸ்லாம் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை அது பயங்கரவாதத்தை எதிர்க்கிறது.

உலகில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது என பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கல்லெல்ல சுமனசிறி தேரர் தெரிவித்தார்.

இலங்கை பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நிலவும் வரலாற்று, பொருளாதார, இராணுவ, கலாசார உறவுகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நேற்று கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பேராசிரியர் கல்லெல்ல சுமனசிறி தேரர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நூற்றாண்டு காலமாக இலங்கையில் மூவின மக்களும் அமைதியான முறையில் மனித நேயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.எனினும் அவ்வப்போது சில அசம்பாவித செயல்களும் நடந்தேறியுள்ளன.

மதம் , மனித நேயம் என இரு விடயங்கள் உள்ளன. மதம் ஆளுக்காள் வேறுபடலாம். ஆனால் மனித நேயம் என்பது ஒன்றேயாகும்.மதங்கள் என்ற பெயரினால் பிளவுகள் எற்படலாம்.

ஆனாலும் அதனை மனித நேயம் என்ற விடயத்தினால் சரி செய்து கொள்ள முடியும். எனவே மனித நேயம் என்கின்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மதமும் அதன் பெயரினால் சர்ச்சைகளை உருவாக்கச் சொல்லவில்லை. மதங்கள் ஐக்கியத்தைப் பேணவே போதிக்கிறது.

இஸ்லாம் மதமானது சமாதானத்தை போதிக்கின்ற மதமாகும். அதில் சமாதானத்திற்கான பல விடயங்கள் உள்ளடக்கப்படிருக்கின்றன. ஒருவருக்கொருவர் சலாம் கூறுவதே அடிக்கடி சமாதானத்தை ஞாபகப்படுத்தும் விடயமாக அமைந்திருக்கிறது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் சாந்தி, சமாதானம், அமைதி என்பவற்றைப் பற்றி அதிகமாகப் போதித்திருக்கிறார்கள்.

இஸ்லாம் ஒரே குடையின் கீழான ஒருமைப்பாட்டையே வேண்டி நிற்கிது.

எனினும் சில அமைப்புகளின் செயற்பாடுகளினால் இஸ்லாமிய தீவிரவாதம் என்கின்ற விடயம் தோற்றம் பெற்று விடுகிறது.

அவ்வாறன பயங்கரவாத செயற்பாட்டிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் .புரிந்துணர்வுடன் தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

தமது வாழ்வினை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது என்றார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►