blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

ஜெயலலிதா ஹெலிகாப்டர் இறங்குவதற்காக 60 மரங்கள் வெட்டிச்சாய்ப்பு : ரயில்வே அபராதம் விதிக்க திட்டம்


திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிற்காக 60 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த சேதத்துக்காக அதிமுகவுக்கு   7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்திற்கு அருகில் ரயில்வேக்கு  சொந்தமான ஜி கார்னர் பகுதியில் நடைபெறுகிறது. அருகே ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக  60 மரங்கள் வெட்டப்பட்டன. இதை பல கட்சிகளும் கண்டித்துள்ளன.


இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு அபராதத் தொகை வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  பொன்மலை ஜி கார்னரில் பொதுக்கூட்டம் நடத்த நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிமுகவினர் 2 நாட்கள் அந்த பகுதியை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ரயில்வே இடத்தில் எந்த சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 7 லட்ச ரூபாய் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து  விசாரித்த பின் டெபாசிட் தொகை 7 லட்ச ரூபாயினை அபராதமாக விதிப்பது பற்றி அறிவிக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►