blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

விமானத்தை தேடிவரும் சீனக் கப்பலுக்கு சமிக்ஞை கேட்டது

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் போன விமானத்தோடு தொடர்புடையதா என்பதும் தெரியவில்லை.தேடுதலை ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஆஸ்திரேலியாவும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►