கம்பளை ரெட்சண் கழகத்திற்கும் மருதமுனை ஈஸ்டன் யூத் கழகத்திற்கும்
இடையிலான உதைபந்தாட்டப் போட்டி நேற்று மசூர் மௌலானா விளையாட்டரங்கில்
நடைபெற்றது.அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏ பிரிவு கழகங்களிடையான சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமாகவே இப்போட்டி இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியாபர் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் மருதமுனை ஈஸ்டன் யூத் கழகத்
தலைவருமான எம்.எஸ்.உமர் அலி, மரிகோல்ட் இப்ராஹிம், எம்.எல்.எம்.ஜமால்டீன்,
முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் உட்பட மற்றும் பல பிரமுகர்களும்
இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply