பொதுமக்களைக் கைது செய்து அவர்களது கைவிரல் அடையாளங்களை
பலவந்தமாகப் பதிவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்று இலங்கையின்
தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் கூறியுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த ஒரு நபர் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உல்லாச விடுதி ஒன்றில் பணிபுரியும்
இந்த நபர், தனது பணி முடிந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில்,
அவரைக் கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அவரது
விரல் அடையாளங்களை பதிவு செய்ததாக அவர் தனது முறைப்பாட்டில்
தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில்,
மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி,
பொலிஸார் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
அதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமன்றி, அந்த நபரிடம் பலவந்தமாகப் பெற்ற கைவிரல் அடையாளங்களை பொலிஸார் அழித்துவிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply