ஆப்கானிஸ்தானில் ஹமீத் கர்சாய் போட்டியில் இல்லாமல் முதல் முறையாய் நடந்த ஓர் அதிபர் தேர்தலில் பெருமளவில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய நபர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் அதிபராக வரக்கூடிய முதல் தேர்தல் இதுவாகும்.
கடுமையான பாதுகாப்பு மற்றும் கனத்த
மழை ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அங்கு ஒரு திருவிழாக் கோலமே
காணப்படுவதாக தலைநகர் காபூலுக்கான ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நாட்டின் வடபகுதியிலும் மிகவும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால், தலிபான்கள் தாக்கலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு ஏழில் ஒரு வாக்குச் சாவடி மூடப்பட்டுக்கிடக்கிறது.
தென்பகுதி நகரான கந்தஹாரில் வாக்காளர்களையும்,
தேர்தல் கண்காணிப்பாளர்களையும் பொலிஸார் திருப்பி அனுப்பிவிட்டதாக
செய்திகள் வரும் நிலையில், மோசடி நடக்கலாம் என்ற கவலையும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply