"திருட்டுத்தனமாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவு தொடர்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருடன் கலந்துரையாடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,இந்த விடயம் தொடர்பில் எமது கட்சியுடன் எவ்வித கருத்துப் பரிமாறல்களையும் செய்யவில்லை."
- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும். கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:-
"மத்திய அரசில் எமது கட்சி பங்காளியாகவுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதே ஆட்சியில் இருக்கின்றது. அதேபோல் கிழக்கு மாகாண சபையிலும் இரு கட்சிகளும் மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட்டுவருகின்ற நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தாது எமது கட்சி மாகாண சபை உறுப்பினர்களை வரவழைத்து கையொப்பமிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கோரியது.
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக இருந்து வந்துள்ளது.
அந்த முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் உள்ளிட்ட நாங்கள் ஆர்வமாக இருந்து வந்துள்ளோம்.
ஆனால், இந்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் திருட்டுத்தனமாக எவருக்கும் அறிவிக்கப்படாமல் பெயர் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவாக எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் இணக்கப்பாட்டுடன்தான் இந்த முதலமைச்சர் தெரிவு செய்யப்படுகின்றார் என்று கூறி எம்மை அழைத்து கையொப்பம் இடுமாறு கூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பில் எமது தலைவருக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட நான் இவ்வாறான பிழையான அணுகுமுறை தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டதுடன் தலைமைத்துவத்தின் அனுமதியின்றி கையொப்பம் இட முடியாது என்பதை தெரிவித்ததுடன் எமது கட்சியின் தலைவருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளேன்" - என்றுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply