blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, February 6, 2015

ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!!

முன்னிலை சோசலிச கட்சியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த கால அரசின் இராணுவமயப்படுத்தல் செயற்பாடுகளைக் களைந்து ஜனநாயக வழியில் நாட்டை வழி நடாத்துவார் எனும் நம்பிக்கையில் மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் சட்ட,ஒழுங்கு பிரச்சினை பொலிஸ் கட்டுப்பாட்டை மீறுமானால் அங்கு உடனடியாக இராணுவம் தலையிட்டு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனக் கோரும் சுற்றறிக்கை ஜனாதிபதியால் கடந்த 02ம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் இவ்வமைப்பு சார்பில் துமிந்த நாகமுவ இம் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட, முப்படைகளின் தலையீட்டுக்கான அனுமதி வழங்கப்படுவது வழக்கமாயினும், இது ஜனநாயக உரிமை மீறல் என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு அவசர கால சட்டம் தளர்த்தப்பட்டதன் பின் முன்னைய ஜனாதிபதியாலும் மாதாந்தம் இவ்வாறான சுற்றறிக்கை வெளியிடப்பட்டு வந்ததோடு இறுதியாக ஜனவரி 03ம் திகதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைவான சுற்றறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பெப்ரவரி 02ம் திகதி புதிய ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உட்பட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►