blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, February 6, 2015

மு.கா தலைமையால் கல்முனை மண்னும் அம்பாரை மாவட்டமும் புறக்கணிக்கப்பட்டுவருவதை உணர முடிகிறது! - நூருல் ஹுதா

பூதாகரமாக வெடித்து புஸ்வானமாகிப்போன கிழக்கு மாகாண சபை முதல்வர் பதவி இந்நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏமாறுவதும் ஏமாத்துவதும் எப்படி எனும் பாடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பித்துள்ளது.

அம்பாரை மாவட்டத்துக்கே முதலமைச்சு பதவி வரும் எனும் கனவை தனது பாராளுமன்ற ஆசனத்தையும், தலைமைத்துவதையும் பாதுகாக்க வேண்டிய தேவைக்காக கட்சியினதும் மக்களினதும் ஏமாற்று, துரோகத்தனத்தின் முகவரியாக இருந்து செயட்படும் ஒருவருக்கு இந்த தலமை வழங்கியுள்ளது மிகவும் மனவேதனையான ஒன்றாகும்.

இப்படியான சங்கதிகளை நன்றாக அறிந்த எமது கட்சி மு.கா தலைமையை நோக்கி கிழக்கு வாழும் மக்களுக்காக முதலமைச்சர் விடயம் சம்பந்தமாக பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.என்பது உலகறிந்த உண்மை.

இந்த அரசை உருவாக்க ஒட்டுமொத்த இலங்கை மக்களும் எதிராணியோடு கைகோர்த்த அவ்வேளையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளின் ஒரு துளியேனும் அறியாது மஹிந்த அரசோடு சம்பந்தம் கலக்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்த ஒரு கயவனின் கையில் முதலமைச்சை கொடுத்து கிழக்கு மண்ணை அசிங்கப்படுத்திய மு.கா தலைவரின் செய்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த பல வருடங்களாக மு.கா தலைமையால் கல்முனை மண்னும் அம்பாரை மாவட்டமும் வெகுவாக புறக்கணிக்கப்பட்டுவருவதை நன்றாக உணர முடிகிறது. எனது இந்த கருத்துக்களை பிரதேசவாதமாக கொள்ளாது உரிமைக்கான கோஷமாக கொண்டு சகல மக்களும் நன்றாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

சிந்தித்து முடிந்த உடன் தானும் தான் பாடுமாக அடுத்த தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் ஊத போகும் மகுடிக்கு செவிசாய்த்து விட்டு பின்னாட்களில் புலம்பும் என் உறவுகளே! பல ஏமாற்றங்களை சந்தித்து பழகிப்போன நமது தலையில் இனியும் மொட்டை அடித்து சந்தனம் தடவ வரும் கூட்டத்தை அடியோடு ஒழித்து உரிமைகளை பெற வேண்டிய நேரம் இது.
சிந்தியுங்கள்:

கடந்த பொதுதேர்தலில் சம்மாந்துறை தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உருப்புரிமை இல்லாமல் போன போது தேசிய பட்டியலை சம்மாந்துறை தொகுதிக்கு வழங்காமல் ஒரே ஊருக்கே அந்த தேசியபட்டியலையும் வழங்கி சம்மாந்துறை தொகுதி மக்களுக்கு ஏமாற்றம் அழித்தது (பிரதேச வாதமில்லை) ஜனநாயகமாக மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காமல் தான்தோன்றி தனமாக தனது செய்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்குமாறு கோரி சாய்ந்தமருது மக்களின் ஆணையை கட்சி உயர்புள்ளிக்கு தாரைவார்த்தமை,அண்மையில் கிழக்கு ஆளுநர் விடயத்தில் தனது சுயநலனை மையமாக வைத்து செயற்பட்டமை இப்படி பல குற்றசாட்டுக்களை அடுக்கிகொண்ட போகலாம்.
ஜனநாயகமான ,சுபிட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்ப தமது வாக்குகளை அன்னதிற்கு வாரி வழங்கிவிட்டு தமது மண்ணுக்கு பிரதியமைச்சாவது கிடைக்கும் என்ற ஏக்கதிற்கு பதில் துரோகமே.

தேசிய பட்டியலையும் வழங்கிவிட்டு பிரதியமைச்சையும் வழங்கிவிட்டு கல்முனை தொகுதி மக்களை கோமாளிகள் போல நடத்தும் இந்த தலைமையை இனியும் நம்புமா இந்த சமூகம்.? அதே இல்லாவிடினும் முதலமைச்சாவது கிடைக்கும் என்ற ஏக்கதிற்கு பதில் ??????.

தனது சொந்த மண்ணில் தனது பருப்பு வேகாது என்பதை நன்றாக புரிந்து கொண்ட இந்த துரோகமிக்க தலைமை அம்பாரை மாவட்டத்தில் தனது பாராளுமன்ற ஆசனத்தை தக்க வைக்க எடுத்த முயற்சிகள் மண் கவ்வியதும் தற்போது மட்டு மண்ணை நோக்கி காய் நகர்த்த முற்பட்டுள்ளார் என்பதே மறுக்கவோ மறைக்கவோ முறியாத உண்மை.

கட்சிக்கு விசுவாசமும் நல்ல நிர்வாக திறனும் கொண்ட கட்சியின் அடிமட்டம் வரை போராடிய எத்தனையோ அம்பாரை மாவட்ட போராளிகள் இந்த கிழக்கு மாகாண சபையில் இருந்தும் இந்த கிழக்கு மாகாண முதல்வர் பதவி மக்களை வித்துத்தின்ணும் பெருமுதலையின் கையில் அமைச்சர் ஹக்கீம் வழங்கிய மர்மம் என்ன?

அண்மையில் நடந்து முடிந்த ஒரு மாகாண சபைத்தேர்தலின் போது மு.கா கட்சிக்கு எதிராக இவரால் தோற்றுவித்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டமையும்,சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.(இந்த நாட்டில் வேறு சின்னங்கள் இல்லையா?).

அத்துடன் கட்சிக்கு பல சிக்கல்களை தொடர்ந்தும் தோற்றுவிக்கும் இந்த நபரை கட்சியின் உயர்ந்த இடத்தில் வைக்க கட்சி தலமை ஆசைபடுவதன் மர்மம் என்ன? தனது பதவிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சி தவிசாளரை ஓரங்கட்டவும் தனது இருப்பை தக்க வைக்கவுமே அன்றி வேறில்லை.

மக்களே!

இந்த கட்சியில் நாயை அல்ல பேயை காட்டி வாக்களிக்க சொன்னாலும் தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்காகவாவது வாக்களிப்போம் எனும் மக்களின் மனோநிலை மாறவேண்டும்.தவரும் பட்சத்தில் இதனை விட பாரிய துரோகங்களை சந்திக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்.

கொடுர ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பின நாம் பட்சோந்தித் தனமிக்க ஏமாற்று பேர்வழிகளையும் சொந்த ஊர்களுக்கு திருப்பியனுப்ப முன்வரவேண்டும்.

தேர்தல் காலத்தில்மட்டும் போட்டனி வியாபாரிகள்போல பொய்களையும்,ஏமாத்துவாக்குறுதிகளையும் போட்டலத்தில் கட்டிவந்து பசப்பு வார்த்தைகள் மூலம் உங்கள் வாக்குகளை அள்ள முடியாது என்பதை இவர்களுக்கு காட்ட முன்வாருங்கள்.

அரசியல் ஆனாதைகளாக்கப்பட்ட நாம் சிந்திக்காமல் பாட்டுக்கு வாக்களிக்கும் கோமாளிகள் எனும் அவர்களது எண்ணத்தை பொய்ப்பித்து அம்பாரை மண்ணினதும் மக்களினதும் சுயக்கௌரவததை நிலைநாட்டி உரிமைகளை வெல்ல முன்வாருங்கள்.

கயவர்களுக்கு பாடம் புகட்ட சகலரும் விழிப்புடன் செயலாற்றுவோம். என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் அல்-ஹாஜ் நூருல் ஹுதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►