பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை
குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோவரி
(Rouvroy) நகரில் சென்று கொண்டிருந்த வழிபோக்கர் ஒருவர் புட்டிகளை போடும்
குப்பை தொட்டியில் (Bottle Bin) இருந்து சிறுகுழந்தையின் அழுகுரலை கேட்டு
அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதை உறுதி செய்த அவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் பொலிசார் வந்து குழந்தையை மீட்டபோது, அந்த குழந்தை
வெப்பத்தாலும், உடைந்த கண்ணாடி புட்டிகளாலும் காயப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், பச்சிளம் குழந்தையை வீசி சென்ற 14 வயது சிறுமியை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 14 வயது சிறுமி,
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் இந்த
குழந்தையை மறைத்து பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
No comments:
Post a Comment
Leave A Reply