இந்தியாவில் 10 வயதுக்குள்ளான பெண் குழந்தைகளில் 49 சதவிகிதம் பேர்
பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள்
குறித்து யுனிசெப் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் இருந்து கிடைத்த தகவல் வருமாறு:
இந்தியாவில் 10 வயதுக்கு
குறைந்த பெண் குழந்தைகளில் 50 பேரில் ஒருவர் வன்புணர்ச்சி அல்லது பாலியல்
வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் 49% சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: உறவினர்களாலேயே பலாத்காரம்
அதிர்ச்சி தகவல்
10 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் 10 சதவீதம் பேரும் 15 முதல்
19 வயது பிரிவினரில் 30 சதவீதம் பேரும் டீன் ஏஜ் கடப்பதற்குள் சராசரியாக 49
சதவீத பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.
டீன் ஏஜ் பருவத்தில் இருந்தபோது இப்போது தங்கள் கணவர்களாக இருப்பவர்களால்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 77 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இந்த
வயது பிரிவினரில் 6 சதவீதம் பேர் தங்கள் உறவினர்களாலேயே பாலியல்
பலாத்காரத்துக்கு உள்ளானதாக தெரிவித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply