blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80102

Thursday, February 26, 2015

மீண்டும் மஹிந்த...!!?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென கோரியே இந்த பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள கையெழுத்து திரட்டும் ஆரம்ப நிகழ்விற்கு பௌத்த பிக்குகள் மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►