
டீ சாதி பரகத் (23), அவரது மனைவி யொசூர் மொகமட் (21), மற்றும் அவரது சகோதரி முகமட் அபு ஸல்ஹா (19) ஆகிய முஸ்லிம் மாணவ மாணவிகளே கொல்லப்பட்டிருந்தனர்.
ஷெபல் ஹில் பல்கலைக் கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ‘பார்க்’ ஒன்றில் செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத நபரால் இம்மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இடமிருந்து வலம்: டீ சாதி பரகத் (23), அவரது மனைவி யொசூர் மொகமட் (21), மற்றும் அவரது சகோதரி முகமட் அபு ஸல்ஹா (19)
ஆனாலும், இச்சம்வத்தை அமெரிக்காவின் எந்தவொரு ஊடகங்களிலும் வெளிவராமல் அமெரிக்கா இருட்டடிப்பொன்றை பல மணிநேரங்களாக செய்திருந்தது.
எனினும், குறித்த மாணவர்களது நண்பர்களால், முதன் முதலாக டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இச்செய்தி பதியப்பட்டது.
கொல்லப்பட்ட குடும்பத்தினரின் நண்பி ஒருவரின் ‘டிவீட்’

அதன் பின்னர் இச்செய்தியினை 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பகிர்ந்தளித்ததன் பின்னர், அல் ஜெஸீரா ஆங்கில ஊடகம் நேற்று முதன் முதலில் உலகுக்கு செய்தியாக அறிவித்தது.
அதன் பின்னர் பிரித்தானியாவின் பி.பி.சி. ஆங்கில ஊடகமும் மேலோட்டமான செய்தியொன்றை நேற்று மாலை வெளியிட்டிருந்தது.
இதன் பின்னரே உலகெங்கிலும் இக்கொலைச் சம்பவம் அமெரிக்காவால் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்ட ஓர் சதி என மக்கள் ஆத்திரமடைந்து, பல விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கிரேக் ஸ்டீபஃன் ஹிக்ஸ் எனும் 46 வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
கொல்லப்பட்ட கனவன் மனைவி ஆகிய இருவரும் வட கரொலினா பல்கலைக் கழகத்தில் பட்டதாரிகளாவர். பரகா (கனவன்), வர்த்தகத் துறையில் கடந்த 2013 இல் பட்டம் பெற்றார். மொகமட் எனும் மாணவி( மனைவி), கடந்த டிசம்பர் மாதம் உயிரியல் விஞ்ஞானக் கற்கையில் பட்டம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட 3 பேரும் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டிருப்பதால், ஓர் தண்டணை வழங்கும் விதமாக இக்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக ஷெபல் ஹில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply