முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் இது நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட் பெட்டிகளில் புகைப்படங்களுடனான எச்சரிக்கை இடம்பெறவேண்டுமென தான் தெரிவித்ததை நியாயப்படுத்துமாறு சிலோன்டொபாகோ நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நிறுவனம் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் என மகிந்த அச்சுறுத்தினார்.
அவ்வாறு அவர்கள் முன்னிலையில் அவர் நடந்துகொண்டது நியாயமற்றது என சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்களே மிகமோசமாக ஊழல்களில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, February 13, 2015
மஹிந்த அவமானப்படுத்தினார்!! மனம்திறந்தார் மைத்திரி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...

No comments:
Post a Comment
Leave A Reply