blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, January 21, 2015

கல்வி வறுமை எம் சமூகத்தினை பல மடங்கு பாதிப்படையச் செய்யலாம் - றினோஸ் ஹனீபா

தகவல்: எம். ஹாத்தீம்:
கல்முனை மொனார்ச் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களின் வருகையும் புதிய வகுப்பறைக்கான திறப்பு விழாவிலும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளரும், உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தனது உரையில்:

 'எமது பிரதேசத்தில் பொருளாதார வறுமை போல கல்வி வறுமை என்றும் இல்லாதவாறு தலை தூக்கியுள்ளது. இது பொருளாதார வறுமையை விட பல மடங்கு கல்வி வறுமை எம் சமூகத்தினை பாதிப்படையச் செய்யலாம்.

கல்முனையில் கல்வி பின்னடைந்துள்ளது, எதிர்கால சந்ததியினர் வேறு பாதைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று பேசுகின்ற எவரும் இவ் ஊரில் கல்வி வளர்ச்சி தொடர்பாக எந்தவித ஆக்கவூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை மாறாக கல்வியினை தேடி சிரமத்தோடு கற்பவர்களை கைகொடுத்து உதவாமல் குழி தோண்டி புதைக்கின்ற மிக கேவலமான சிந்தனையில் ஒரு சிலர் ஈடுபடுகின்றார்கள் இவர்களது முயற்சி ஒரு போதும் நிரந்தரமானதல்ல.

இத்தகைய குறுகிய சிந்தனை கொண்டவர்கள் யார் என்பதை எப்போது சமூகம் அறியத் தொடங்குகின்றதோ அப்போது அச்சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தின் முதற்படியாக இருக்கும்.

ஏனெனில் இத்தகைய குறுகிய பக்குவமற்றவர்களினால் சமூகத்திற்கு கிடைக்கும் நல்ல விடயங்கள் தடைப்படலாம் என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு போதும் சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த மாட்டார்கள் மாறாக நிம்மதி இழந்த பித்தர்கள் போல எவ்வித பிரயோசனமுமற்றவர்களாக வாழ்ந்து மறைந்து விடுவார்கள்."
என தனதுரையில் குறிப்பிட்டார்.

இதில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதி தலைவர் ஸாஹிர் கரீமும் புதிய மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.



No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►