மண்சரிவு
ஏற்பட்ட கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு
மேலும் 04 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம்
தெரிவிக்கின்றது.ஆய்வுப் பணிகளை இன்று நிறைவுசெய்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
ஆய்வுகளை விரைவில் நிறைவுசெய்து, பொது மக்களுக்கு உறுதியான தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆய்வுப் பணிகளை இன்று நிறைவுசெய்ய முடியாதுபோனால், நாளை வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலதிக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உள்ளதாக காமினி ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply