கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் சிக்கி, 192 பேர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.மூவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், கொஸ்லாந்தை மண்சரிவில் சிக்கி, 19 பேர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ள கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்றுநேரத்திற்கு முன்னர் விமானத்தில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொஸ்லாந்தை அனர்த்தத்தினால் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ள சிறார்களின் பொறுப்பை அரசாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply