blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, January 22, 2015

காலி மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை சட்ட ரீதியானதாம்!! - பாதுகாப்புச் செயலாளர்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கப்பல் சட்ட ரீதியானது என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலி முறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன. சட்ட விரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட ரீதியானது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக்கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காலி துறைமுகத்திலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது. சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளுக்காக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பற்றிய விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே இந்த ஆயுதக் களஞ்சியம் அடங்கிய கப்பல் சட்ட விரோதமான முறையில் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை என பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
Ship 01
Ship 02
Ship 03

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►