பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள கடத்தல் குழுவின் தலைவர் ஹெக்டர் பெல்டரன் லெவ்யா இவர்தான் என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அறிந்து கொண்டதாக மெக்ஸிகோ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
லெவ்யாவை குறித்து தகவல் தெரவிப்போருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது.
மெக்ஸிகோவில் அண்மையில் கைது செய்யப்பட்ட மிகப் பெரிய கடத்தல் குழுத் தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply