மாவனெல்ல டிப்போ அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் அரநாயக்க பிரதேச சபையின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டுள்ள பிரதேச சபைத் தலைவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
தாக்குதலில் காயமடைந்த மாவனெல்ல டிப்போ அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பஸ்கள் ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மாவனெல்லை மற்றும் கேகாலை டிப்போ ஊழியர்கள் இன்று முற்பகல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply