பொலிவுட்டில்
தற்கொலைகள் நடப்பது மிக அதிகம், தற்போது காதல் தோல்வியில் இந்தி நடிகை
தற்கொலை செய்துகொண்டார்.இதை அறிந்த மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தற்கொலை செய்த அர்ச்சனா பாண்டே முதலில் மொடலிங் துறையில் அறிமுகமாகி பிறகு இந்தி பட உலகில் சில படங்களில் மட்டும் நடித்தார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அந்த வீடு சந்தேகிக்கும் படி கடந்த இரண்டு நாட்களாக பூட்டி கிடந்தது. அது மட்டும் இல்லாமல் விட்டுக்குள் துர்நாற்றமும் அடிக்க தொடங்கியது, உடனே அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் என்று பதறி பொலிசுக்கு தகவல் தெரிவித்தார்கள்.
பொலிஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நடிகை அர்ச்சனா பாண்டே பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
பிறகு விசாரணையில் அவர் தற்கொலை மேற்கொண்டுள்ளார் என்று தெரிய வந்தது, அர்ச்சனா பாண்டேயின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்தனர். அதில் தனது காதலனுக்கு அடிக்கடி இவர் பேசி இருப்பது தெரிய வந்தது. காதல் தோல்வியால் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
No comments:
Post a Comment
Leave A Reply