blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, December 20, 2014

கொழும்பில் நடைபெற்ற கட்டாரின் சுதந்திர தின நிகழ்வு!

கட்டார் நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகள் நேற்று (19) மாலை கொழும்பு, ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது. 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் திகதியில் கட்டார் நாடு தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான டிலான் பெரேரா, ரவூப் ஹகீம், சிரேஷ்ட அமைச்சர் பௌசி, ஹான் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கட்டாரை சுதந்திர நாடாக நிறுவிய அஷ் ஷேக் ஜாஸிம் பின் முஹம்மது அல் தானியை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வை வருடா வருடம் இலங்கைக்கான கட்டார் தூதரகமும் இலங்கையில் கொண்டாடி வருகிறது.
இந்நிகழ்வில் கட்டாரின் பண்டைய வரலாறு, பழக்க வழக்கங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்க்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் எமது செய்தியாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►