நிந்தவூரை சேர்ந்த 18 மாதமேயான பச்சிளம் பிள்ளை ஒன்று வெள்ள நீரில் மூழ்கி மரணமாகியுள்ளது.
குறித்த குழந்தையானது நிந்தவூர் 8 ஐ சேர்ந்த்த அர்சாத் முஹம்மது ஹனீப் என்பதுவேயாகும்.
இது குறித்து தெரியவருவதாவது;
நீரில் மூழ்கிய குழந்தையை பெற்றோர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர், குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.
அதிர்சியோடும் இழப்பை தாங்காமலும் கலங்கியவர்கள் குழந்தையை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர்.
அதிஷ்டவசமாக, வீடு திரும்பிய பின்னர் குழந்தைக்கு உயிர் வந்தது, மீண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு குறித்த வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக தூக்கி சென்ற போதிலும் சிகிச்சை பலன் இன்றி குழந்தையின் உயிர் உண்மையிலேயே பிரிந்தது.
குழந்தைக்கு முறையான சிகிச்சை கிடைக்காமையினாலும் வைத்தியர்களின் கவனயீனத்தினாலுமே இவ்வாறு தமது குழந்தையின் உயிர் போனது என பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்னால் கன்டன கோஷங்களை எழுப்பினர்.
பெற்றோர்களுக்கு இது குறித்து சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமக்கு முறைப்பாடு கிடிக்கப்பெற்றதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் செய்திகளுக்காக,
எம். ஆர். ஏ. நிஷா
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
7 வது முறையாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கியது.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply